Avinashilingam Institute for Home Science and Hr. Education for woman, Deemed University
18 அக்டோபர் 1998 - அன்னபூர்ணா கலையரங்கம் - அக்டோபர் 1998 முப்பெரும் விழாவில் - அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். ராஜம்மாள் . பி தேவதாஸ் அவர்களின் தலைமை உரையிலிருந்து....
கோவையில் கலை உணர்வுக்கும், கலை வளர்ச்சிக்கும் போதிய வாய்ப்புகள் இல்லாத இந்த காலத்திலும், லலித் கலாக்ஷேத்ரா வந்து இந்தகைய ஒவியக்கலை மட்டுமல்லாது இசைக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றை வளர்த்துவருவது கோவை மக்கள் அனைவருக்கும் ஒரு அறிய, பெரிய வரப்பிரசாதமாகும். அதற்காக திரு. ரவிராஜ் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.
ஆகவே இந்த கலையை பரப்புவதற்காக திரு. ரவிராஜ் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை நாம் பெரிதும் போற்ற வேண்டும்! நாம் அனைவரையும் ஒன்றிணைந்து அதற்கு உதவி செய்யவேண்டும்.
இந்த லலித் கலாக்ஷேத்ரா ஆரம்பித்த போதே திரு. ரவிராஜ் அவர்கள் தன்னுடைய எதிர்கால திட்டங்களைப் பற்றியெல்லாம் கூறினார்கள். அப்போது தான் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் தோன்றிய பருவம் அப்போது நான் அவர்களிடம் கூறினேன்-"நாம் இணைத்து நடத்தும் போது அவினாசிலிங்கம் பல்லைக்கழகம் உங்களுக்கு சான்றிதழ் கொடுக்க முடியும். இணைந்து எப்படி நடத்துவது என்பதை குழுவினருடன் ஆலோசனை செய்ய வேண்டும். வழிகளை காணவேண்டும். சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும். ஏனென்றால் ஒரு பல்கலைக்கழகம் தானாக முடிவெடுக்க முடியாது. அதற்கு சில அதிகாரம் எடுக்கவேண்டிய அமைப்புகள் இருக்கின்றன, அவற்றை ஆமோதிக்க வேண்டிய பல்கலைக் கழக மான்ய குழு இருக்கின்றது. அதை வைத்து செய்ய வேண்டும். யோசிப்போமி என்றேன்!
ஆனால், அதன் பிறகு திரு. ரவிராஜ் அவர்கள் இராண்டுண்டுகள் வெளிநாடு சென்றுவிட்டார். இப்போது வந்திருக்கிறார். அவர் வந்திருக்கின்ற இந்த நல்ல வேளையில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் கல்லூரியினை ஆரம்பித்திருக்கிறது.
இந்த சமுதாய கல்லூரியில் இந்த பாடங்களுக்கு மிகவும் உயர்ந்த இடம் கொடுத்திருக்கின்றோம். ஆகவே, சமுதாயக் கல்லூரியின் ஆதரவில் இங்குள்ள இந்த திட்டங்களை நாங்கள் சான்றிதழ் கொடுத்து அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தோடு லலித் கலாக்ஷேத்ராவை இனைத்து செயல்பட வாய்ப்பிருக்கும் என்று இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் முன்னிலையில் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்! இதன் மூலமாக கோவை நகரத்தில் கலை உணர்வுகள் பெருக்க வழி செய்ய முடியும்!
ஆகவே அவினாசிலிங்கம் பல்கலைக்கழகமும், லலித் கலாக்ஷேத்ராவும் இணைந்து கோவையை ஒரு கலை உணர்வுள்ள நகரமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்! திரு. ரவிராஜ் அவர்களுக்கு மேலும் நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், லலித் கலாக்ஷேத்ரா இன்னும் ஓங்கி வளர்வதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி அமர்கின்றேன். வணக்கம். - (18th October 1998)
Chairman, Bhartiya Vidhya Bhavan & SIMA
18 அக்டோபர் 1998 - அன்னபூர்ணா கலையரங்கம் - அக்டோபர் 1998 முப்பெரும் விழாவில் - அவினாசிலிங்கம் மனையியல் நூல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். ராஜம்மாள் . பி தேவதாஸ் அவர்களின் தலைமை உரைக்குப்பின், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சைமாவின் தலைவர் திரு. பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் உரையிலிருந்து....
ஒரு பல்கலைக்கழகமே பாராட்டியபிறகு தனிப்பட்டவர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை! லலித் கலாக்ஷேத்ராவிற்கு தேவையான ஒத்தாசையை வழங்குவதாக அம்மா அவர்களே கூறிவிட்டார்கள். அம்மா அவர்கள் கூறிவிட்டால் மறுவார்த்தை கூறிவிட முடியாது. அம்மா அவர்கள் சொல்லவேண்டியதை தெளிவாக சுருக்கமாக சொல்லிவிட்டார்கள் ..
“..... திரு. ரவிராஜ் அவர்களை நான் உளமார பாராட்டுகிறேன். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதன் ஒருவர் செய்வது என்பது மிக மிகப் பாராட்டவேண்டிய ஒன்று! அவருக்கு அப்படி ஒன்றும் பெரிய பக்க பலம் இல்லை! பெரிய பணபலமோ, அதிகார பலமோ, ஆள் பலமோ இல்லை! ஆனால் விடா முயற்சியுடன் தனி மனிதனாக ஒரு சில நண்பர்களை கூட வைத்துக்கொண்டு இந்த பணியை இவ்வளவு சிறப்பாக செய்கின்றபோது, சைமாவின் சேர்மேன் என்கிற முறையில் அல்ல, பாரதீய வித்யா பவன் சார்பாக எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. ரவிராஜ் அவர்கள் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கக்கூடும் என்பதை என்னால் ஓரளவு யூகிக்க முடிகிறது. எங்களைப் போன்றவர்களே நடத்த முடியாததை இவர் எப்படி செய்கின்றார் என்பதை பார்க்கின்றபோது அவருடைய தன்னம்பிக்கையை நான் பாராட்டுகின்றேன். அதுமட்டுமல்ல, இங்கு உங்களைப் போன்றவர்கள் அவர்களுக்குத் தருகின்ற உற்சாகத்தை நான் பார்த்து உங்களையும் பாராட்ட கடமை பட்டிருக்கிறேன். எதிர் காலத்தில் இந்த லலித் கலாக்ஷேத்ரா சென்னையில் உள்ள கலாக்ஷேத்ராவிற்கு அடுத்தபடியாக வரவேண்டும் என்று நான் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அமைப்பிற்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது! அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் இந்த அமைப்பிற்கு தேவையான ஒத்தாசையை தருகிறேன் என்று சொல்லியாகிவிட்டது. இதற்கு மேல் ஒரு அங்கீகாரமே தேவையில்லை! ஆகவே எதிர்காலத்தில் இந்த அமைப்பு சிறந்து விளங்க வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்... " (18 October 1998)-
Vice-Chancellor, Tamil Nadu Music and Fine Arts University.
“If every Music, Dance and Fine Arts institute of Tamil Nadu core to be leaded by someone like Mr. Raviraj – with equal support, dedication and backing from his family.
Tamil Nadu would be famous for as many aesthetic & culturally rich in music, dance and fine arts as there are vedic and ancient temples in the state.
I search for words to admire Mr. Raviraj’s performance as a creator of such aesthetic institutions. “EXEMPLARY”, “UNIQUE”, “EXTRAORDINARY”………..” are under stated expressions to describe his vision and Raviraj College of Fine arts. God Bless!!..
- Veena E. Gayathri, Vice Chancellor – 21.08.2016
Founder, Bharatakalanjali, Chennai
Lalit Kalakshetra’s is an institution that has grown from strength to strength in the past 25 years since its inception. The Silver Jubilee program was extra ordinary and was very impressive & enjoyable.
I heartly congratulate everyone involved in making the event a great success!
- Naatyaachaarya Padmabhushan Shri. V.P. DHANANJAYAN.
Founder, India Design Forum, Chairman & Managing Director, Rajshree Sugars and Chemicals
Mr. Raviraj, the Founder deserves much praise for being a pioneer in bringing arts education to the city of Coimbatore.
I have watched the Institution grow from modest means to this great stature over a very short period and I am confident they will expand and grow in many fields of Fine Arts, Music and Cultural enhancement.
The dedication and commitment of Mr. Raviraj and his family to serving the community through this institution is commendable and we citizens of Coimbatore are indeed proud of them!.
My heartiest Congratulations to Lalit Kalakshetra, Raviraj College of Fine Arts on their 25th Anniversary Celebrations!
My sincere greetings on this milestone achievement
Best regards, Rajshree Pathy, Chairman & Managing Director (11th Aug. 2016)
“……. I would like to Congratulate Mr. Raviraj on his dedicated services and outstanding Success & Achievements in the field of Fine arts”. Keep it up!
- Padma Shri. ARUNACHALAM MURUGANANTHAM
Regional Centre, Chennai.
“………. I really appreciate the efforts taken care by Mr. Raviraj for each and every thing for developing Lalit Kalakshetra & Raviraj College of Fine Arts and his Cultural and Research CentreKalagram with a passion on Visual Arts, Music & Dance. More than that his whole families involvement in the same of process of making a Best Art Institution in a meaningful manner for the Country has to endorsed in the Cultural Pedastal.
His personal care in every minute activities in the administrative matters the spirit of making Perfection, Uniqueness in a remarkable one and it makes him a Great Success!
My best wishes with love to him and his family.
- Shri. Rm. PALANIAPPAN, Regional Secretary
Teynampet, Chennai.
என்றும் மறவாத அன்புடைய நண்பர் ரவிராஜ் அவர்களுக்கு,
தங்களின் நிறுவனமான 'லலித் கலாக்ஷேத்ராவின் 25 வது வெள்ளிவிழா நடைபெறுவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லோரும் பணம் ஈட்டுவதற்காக வெவ்வேறு திசையில் பயணிக்கும் போது தாங்கள் கலைக்காக வாழ்க்கையை அர்பணிப்பதை பார்க்கும்போது என்னை போன்றவர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது
கலையின் புகழ் உச்சிக்கு செல்லவேண்டும் நீங்கள்! கலைஞர்களுக்கு தோன்றாத்துணையாக இருக்கவேண்டும் என்பதே என் விழைவு, பேராசையும் கூட!!
நீண்ட வாழ்க்கை வாழ வேண்டும். உங்கள் குடும்பத்தோருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
பிரியமுடன்
வீர சந்தானம்.
- Senior Artist. Shri. VEERASANTHANAM (17.08.2016)
Managing Director, The Arya Vaidya Pharmacy (Coimbatore) Ltd.,
Mr. Raviraj, Artist who is doing yeomen service in educating the youth through the Lalit Kalakshetra – Institute of Visual and Performing Arts, Coimbatore.
Recipient of “National Awards” and many “State Awards” etc. Mr. Raviraj’s Paintings are superb which still adorn a number of magazines, Star Hotels, Hospitals, Educational Institutions, Temples and Journals in India & Abroad.
A highly qualified man with a good academic career, Mr.Raviraj was gifted with the arts of Visual and Performing arts etc., fifteen of his book in Tamil and English were published by the New Century Book House Pvt. Ltd., His Art books are always in great demand.
Founded his ‘Coimbatore Art Foundation’ and it is serving to the tribal and rural village students, Art lovers and senior citizens to encourage and appreciate art. In which free professional training and interactive workshop which help the youth in poverty line.
I wish him success in all his endeavors.
- Padmashree P.R. KRISHNAKUMAR, Managing Director (12th Aug. 2010)
Tamil Nadu Agricultural University, Coimbatore – 3
"............ ஓவியர் திரு ரவிராஜ் ஆர்வமுள்ள இளைஞர், வேளாண் பல்கலைக்கழக ஒளியர். தன் ஓவியத்திறமைக்காக தேசிய விருதினை பெற்றவர்.
இவரது தன் முயற்சியினையும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு அவர் ஆற்றும் தொண்டினையும் பாராட்டுகிறேன்!
தமிழ் உலகம் அவரது முயற்சியினை வரவேற்குமென நம்புகிறேன்!"
I wish him success in all his endeavors.
- Dr. SOLAIAPPAN JAYARAJ, Ph.D., Vice Chancellor, Tamil Nadu Agricultural University (20 .7. 1989)
Regional Asst. Director, Dept. of Art & Culture, Coimbatore – 50
"கோயமுத்தூர் மாவட்டம் பி.என்.புதூரைச் சேர்ந்த நவீன பாணி ஓவியர் திரு.ரவிராஜ் அவரிகள் 40 ஆண்டுகளாக ஓவியர், ஒவிய ஆசிரியர், நுண்கலைக்கல்லூரி முதல்வர், காலை இதழ்களின் ஆசிரியர் என பன்முகத் தன்மை வாய்ந்த ஒவிய கலைஞர், 1983 ஆம் ஆண்டு மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வழங்கிய விருதுகளைத் தொடர்ந்து 1992 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் விருதுகளை பெற்றுள்ளார்.
மத்திய அரசின் சுற்றுலாத்துறை விருதினை 2006-ஆம் ஆண்டு பெற்ற இவருக்கு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட கணைமன்றம் சிறந்த ஒலியருக்கான 'கலைச்சுடரிமணி விருது வழங்ல் கௌரவிக்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறை சார்பின் 2017 ஆம் ஆண்டு சிறந்த கலைப்படைப்புக்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளார். பல தனியார் அமைப்புகளின் விருதுகளும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்காக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான புதிய ஓவிய பாட திட்டத்தினையும் தயாரித்து அளித்துள்ளார்.
இவரின் கலைப்படைப்புகள் தேசிய / மாநில அளவிலான கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலப்பகுதிகளில் ஓவியம் மட்டுமன்றி பல்வேறு கலைகள் பரவவும், மேன்மையடையவும் சேவையாற்றி வருகிறார் திரு ரவிராஜ் ........."
I wish him success in all his endeavors.
-Shri. B. HEMANATHAN, Regional Asst. Director, Govt. of Tamil Nadu (30.04.2021)